ரெடியா? மாதஊதியம் ரூ.65,000 முதல் ரூ.2.50 லட்சம்! மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை!
சென்னை: மத்திய அரசின் டெலி கம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ஸ் பொதுத்துறை நிறுவனத்தில் டிகிரி, என்ஜினியரிங், எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.65 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் டெலி கம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ஸ் (Telecommunications Consultants India or TCIL)எனும் பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: டிசிஐஎல் எனும் டெலிகம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் ப்ரோகிராம் மேனேஜர் பணிக்கு 4 பேர், வல்னரபிலிட்டி மற்றும் த்ரெட் மேனேஜ்மென்ட் ப்ரோபஷனல், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (என்சிஆர்பி), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (சிஎப்சிஎப்ஆர்எம்எஸ்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (ஜேசிசிடி) பணிக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மால்வர் ரீசர்சர்: அன்ட்ராய்டு/ஐஓஎஸ் செக்யூரிட்டி ரீசர்சர், சைபர் இன்வெஸ்ட்டிகேஜன் மற்றும் பாரன்சிக் ஸ்பெஷலிஸ்ட், சைபர் க்ரைம் ரீசர்சர் (டெலிகம் & ஐஓடி), சைபர் க்ரைம் ரீசர்சர் (பிஎப்எஸ்ஐ), மால்வர் ரீசர்சர், பணிக்கு தலா 2 பேர் என தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் சாப்ட்வேர் என்ஜினியர்: மேலும் செக்யூரிட்டி ஆபரேஷன் சென்டர் எக்ஸ்பர்ட், டார்க் வெப் ரீசர்சர், சைபர் சட்ட எக்ஸ்பர்ட், எக்ஸிக்கியூட்டிவ் அசிஸ்டென்ட் (ப்ரோக்யூர்மென்ட்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (என்சிஇஎம்யூ), சீனியர் சாப்ட்வேர் என்ஜினியர், மாஸ் கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட், டிஜிட்டல் மீடியா அவுட்ரீட் எக்ஸ்பர்ட், எகோசிஸ்டம் கம்யூனிட்டி டெவலப்மென்ட் ப்ரோபஷனல் பணிக்கு தலா ஒருவர், சைபர் த்ரெட் அனலிஸ்ட் பணிக்கு 7 பேர் என தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, எம்பிஏ, எல்எல்பி, எல்எல்எம், டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஇ படிப்பை பொறுத்தமட்டில் கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக மாதம் ரூ.65 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பணி வாரியாக பார்த்தால் ரூ.65,000, ரூ.1.20 லட்சம், ரூ.1.60 லட்சம், ரூ.2.50 லட்சம் என மொத்தம் 4 வகைகளில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கடைசி நாள் எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் [email protected] இ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் திறனறி தேர்வு (Skill Tests), நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி காலம்: இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு இன்னொரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications