மாதம் 50,000 சம்பளம்.. தென்காசி ஊரக வளர்ச்சித் துறையில் வேலை.. டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்
சென்னை: தென்காசி மாவட்டத்தில் அரசு ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தென்காசி மாவட்டத்தில் ராஷ்ட்ரிய கிராம் சுவராஜ் அபியான் (ஆர்ஆர்ஜிஎஸ்ஏ) திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும், தென்காசி மாவட்டத்தில் ராஷ்ட்ரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியிடங்கள் விவரம்:
மாவட்ட வள மைய அலுவலர் - 1 பணியிடம்
கணினி உதவியாளர் - 1 பணியிடம்
வட்டார வள மைய பயிற்றுனர் - 10 பணியிடங்கள் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* கல்வித்தகுதியினை பொறுத்தவரை மாவட்ட வள மைய அலுவலர் பணிக்கு MSW / MBA படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம் ஆகும்.
* கணினி உதவியாளர் பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்குவது, அடிப்படை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் ஆகும்.
* வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் ஆகும்.
சம்பளம் எவ்வளவு:
மாவட்ட வள மைய அலுவலர் - மாதம் ரூ. 50,000
கணினி உதவியாளர் - மாதம் ரூ. 22,000
வட்டார வள மைய பயிற்றுனர் - மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பகுப்பாய்வு திறன்கள் மற்றும் பணிக்கான பொருத்தத்தை மதிப்பிடுவதற்காக நடைமுறை சோதனை மற்றும் நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணைப்பில் (link) படிவத் (google form) நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் சென்று கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30.05.2025 ஆகும்.
நிபந்தனைகள்
* இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் கோர இயலாது.
* இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
* ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் ( DRCP ) பணியிடத்திற்கு மட்டும் TNCM Fellowship பட்டியலில் உள்ள MSW / MBA படித்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்.
பணியமர்த்தும் இடம்:
* DRCP Faculty (1)- மாவட்ட ஊராட்சி அலுவலகம், தென்காசி.
* Assistant-cum-Data Entry Operator (1) அலுவலகம், தென்காசி. மாவட்ட ஊராட்சி
* BRCP Trainers (10) - வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 10 வட்டாரங்களில் பணியமர்த்தப்படுவர்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலர் /மாவட்ட பயிற்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி.
தொலைபேசி எண். 04633-298488.
[email protected].












Click it and Unblock the Notifications