மத்திய அரசு நிறுவனத்தில் வேலை:1.60 லட்சம் சம்பளம்! பிஇ பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்.. தட்டி தூக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிறுவனமான டிஹெச்டிசியில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ / பி.டெக், எம்.பிஏ, சிஏ முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000- முதல் ரூ.1,60,000-வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை பார்க்கலாம்.

மத்திய டிஹெச்டிசி (THDC) இந்தியா லிமிட்டெடு நிறுவனம், மத்திய தேசிய அனல் மின் கழகத்தின் துணை நிறுவனம் ஆகும். உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் 102 பணிய்டங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

job Jobs employment

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 102 பணியிடங்கள்
(சிவில்) E-2 கிரேடு - 30
எலக்ட்ரிக்கல் E-2 கிரேடு - 25
மெக்கானிக்கல்- 20
புவியியல் மற்றும் புவி தொழில்நுட்பம்- 07
சுற்றுச்சூழல் - 08
சுரங்கம் - 07
மனிதவளம்- 15
நிதி E-2 கிரேடில் - 15
காற்றாலை மின் திட்டங்களுக்கான என்ஜினியர் - 02

கல்வி தகுதி: பி.இ / பி.டெக், எம்.பிஏ, சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்குக் விண்ணப்பிக்கலாம். பணியின் தன்மைக்கேற்ப துறைசார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000- முதல் ரூ.1,60,000-வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 14.03.2025- கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://test.cbexams.com/EDPSU/THDC/THDC/Registration/Regstep.aspx

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+