டிப்ளமோ படிச்சிருக்கீங்களா?.. ரூ. 70 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை.. சூப்பர் சான்ஸ்
டெல்லி: சிஎஸ்ஐஆர் - தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்காலம். 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனத்தில் Technical Assistant பணியிடத்துக்கு 6 காலியிடங்கள் உள்ளன. இப்பணியிடத்துக்கு மாதந்தோறும் 70 ஆயிரத்து 890 ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டிப்ளமோ அல்லது விவசாயம், தோட்டக்கலை, தாவரவியல், வேதியியல் ஆகிய ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம் ஆகும்.
அதேபோல, 2 டெக்னிக்கல் காலி பணியடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணிக்கு மாதம்தோறும் 38 ஆயிரத்து 840 ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் மெக்கானிக், Floriculture & Landscaping, Draftsman (Civil), House Keeping, Insturment Mechanic, Computer Operator ஆகிய ஏதாவது படிப்பில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் டெக்னிக்கல் காலிப் பணயிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்ச வயதுவரம்பில் சலுகை வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு, எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
இப்பணியிடங்களுக்கு http://recruitment.nbri.res.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 2024 நவம்பர் 21 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை http://recruitment.nbri.res.in என்ற இணையதளம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications