8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருச்செங்கோடு கோவிலில் வேலை.. தேதி முடிய போகுது! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். புகழ்பெற்ற இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் பணிபுரிவதற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வித்தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் & கல்வித்தகுதி: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மொத்தம் 4 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். டிரைவர் பணியிடம் என்பதால் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு டிரைவிங் அனுபவம் இருக்க வேண்டும். இதேபோல் முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம் ஆகும்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணபிப்பவர்கள் 01.07.2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: தபால் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான கல்வி தகுதி, அடையாள சான்று உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,250 கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 4 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். அலுவலகத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்யலாம். இந்த லிங்கை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf
கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் டிரைவர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் 25 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம்,
நாமக்கல் மாவட்டம் - 637211












Click it and Unblock the Notifications