தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (ஐடி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (ஐடி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்:
ஐடி இன்ப்ராக்ஷ்டர் எக்ஸ்கியூட்டிவ், ஐடி தொழில்நுட்ப நிர்வாகி, சாப்ட் டெவலப்பர், சிஸ்டம்/ சர்வர் எக்ஸ்கியூட்டிவ், சிபிஎஸ் சப்போர் என்ஜினியர், டேடா சயிண்டிஸ்ட், தரவு ஆய்வாளர், வணிக அனலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைகேற்ப கல்வி தகுதி கோரப்பட்டுள்ளது. ஐடி இன்ப்ராஸ்ட்ரக்ஷர் பணிக்கு பி இ/ பிடெக்,/ எம்.சி.ஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். சர்வர் மெயிண்டனிங்க், டேடாபேஸ் உள்ளிட்டவற்றில் 12 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் அவசியம். பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் , அக்கவுண்டிங், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஃபைனான்ஸ், எகனாமிக்ஸ் அல்லது அது தொடர்பான பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். டேடா அனலிஸ்ட் பணிக்கு முதுகலை பட்டம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எச்.டி முடித்து இருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிபட்சம் 40 வயது வரை சில பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 15.01.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ITSPCL20242502.pdf
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications