"டிஎம்பி வங்கி"யில் வேலை.. மாதம் 72 ஆயிரம் சம்பளம்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 170 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியது. சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிய இருப்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இதற்கான தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் - 170 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கேரளாவில் 5 பணியிடங்கள், கர்நாடகாவில் 32 பணியிடங்கள், ஆந்திராவில் 34 பணியிடங்கள், மகராஷ்டிராவில் 38 பணியிடங்கள், தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. உள்ளன.
கல்வித் தகுதி & வயது வரம்பு: முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். முன் அனுபவம் தேவையில்லை. எனினும் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.72,061 வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு (ஆங்கிலம்) என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்பட பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து விண்ணப்பிக்கவும். https://www.tmbnet.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000-ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 27 ஆம் தேதி ஆகும். இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்துகொள்ளவும். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். தேதி அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும். எழுத்து தேர்வுக்கான முடிவானது வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் வெளியிடப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications