ரூ.35,400 டூ ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் சூப்பர் வேலை!
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சித்தா பார்மசிஸ்ட் (மருந்தாளுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் தனித்தனியே வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
காலியிடம்- கல்வி தகுதி: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சித்தா பார்மசிஸ்ட் (மருந்தாளுநர்) பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசின், சித்தா பார்மசி, இன்டகிரேட்டட் பார்மஸி (டிஐபி) உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், பொதுப்பிரிவு முன்னாள் படை வீரர் என்றால் 50 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் என்றால் வயது வயது வரம்பு என்பது இல்லை.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level 11 அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் கிடைக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் டிசம்பர் 18 ம் தேதி விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, எஸ்டி, டிஏபி(பிஎச்), கைம்பெண்களுக்கு கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications