டிகிரி போதும்.. மாதம் ரூ.25,000 டூ ரூ.50,000 சம்பளம்! தமிழக கைத்தறி கார்ப்பரேஷனில் அசத்தலான வேலை
சென்னை: தமிழ்நாடு கைத்தறி மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் அசிஸ்டென்ட்ஸ் மற்றும் டேட்டா என்ட்ரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கைத்தறி மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்(Tamil Nadu Handloom Development Corporation Ltd.,) செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலகம் சென்னை குறளக கட்டடத்தின் 2வது மாடியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு கைத்தறி மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
அதன்படி ப்ரோகிராமர் மேனேஜ்மென்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எம்பிஏ, பிடெக் (டெக்ஸ்டைல்ஸ்), இளங்கலை பிரிவில் டிசைன், முதுகலை பிரிவில் பொருளியல், அப்ளைட் ரீசர்ஜ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
அடுத்ததாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி. இந்த பணிக்கு மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து கம்ப்யூட்டர் அறிவு, டைப்பிங் ஸ்கில் கொண்டிருக்க வேண்டும். அதோடு ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பை காட்டிலும் பணியிடங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் தமிழக கைத்தறி மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு அதிகாரம் உள்ளது. ஒருவேளை பணியிடம் அதிகரிப்பு அல்லது குறைக்கப்பட்டால் அதுபற்றிய அறிவிப்பும் பின்னர் தெரிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.loomworld.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாகும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாகும். இருப்பினும் திறமையை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது செய்யப்படும்.ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் [email protected] எனும் இ-மெயில் மூலம் கேட்டு தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications