8, 10, மாஸ்டர் டிகிரி முடித்தோருக்கு வாய்ப்பு.. அழைக்கும் அறநிலையத்துறை! கன்னியாகுமரியிலேயே வேலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீதேவி குமரி மகளிர் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களின் கீழ் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

அதன்படி கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் குழித்துறையில் ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
உதவி பேராசிரியர் பணி: உதவி பேராசிரியர் பணி பிரிவில் விலங்கியலுக்கு ஒருவர், மலையாளத்துக்கு ஒருவர், கணிதத்துக்கு 2 பேர், தாவரவியலுக்கு ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தட்டச்சர் - லேப் அசிஸ்டென்ட்: தட்டச்சர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 10ம் வகுப்பு முடித்து தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றில் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு லேப் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிற பணியிடங்கள்: இதுதவிர ஸ்டோர் கீப்பர் பணிக்கு ஒருவர், பதிவறை எழுத்தர் (Record) பணிக்கு 2 பேர், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஸ்டோர் கீப்பர், பதிவறை எழுத்தர், லைப்ரேரி அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இந்த பணிகளுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sdkwc.org.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தியிட்டு உரிய கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் நகலுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப முகவரி: விண்ணப்பங்களை ‛‛செயலர், ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துரை - 629163, கன்னியாகுமரி'' என்ற முவரிக்கு 2024 ஜனவரி மாதம் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 04651-260344 என்ற எண், இல்லாவிட்டால் [email protected] இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications