டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவி.. 'ஆன்சர் கீ சேலன்ஜ்'.. செப்டம்பர் 9ம் தேதி வரை அவகாசம்
சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுக்கான உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய 9-ந்தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 12, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கு கணினி வழித் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்சர் கீ சேலன்ஜ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, கடந்த மாதம் (ஆகஸ்டு) 12, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டது.

இதில், ஆகஸ்டு 19, 20, 21-ந்தேதிகளில் நடைபெற்ற தேர்வின் தாள்-2 உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் ஆகஸ்டு 2-ந்தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், வருகிற 9-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை), தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'ஆன்சர் கீ சேலன்ஜ்' என்ற இணைப்பை பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான வழிமுறைகள் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தபால் வழியாகவும், இ-மெயில் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்கள்: இதனிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 105 இடங்கள் உள்ள புதிதாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்று நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுகள் எழுத்து தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு ஆகும். பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம் பெறும். இரண்டாம் தாளில், பாடம் தொடர்பான வினாக்கள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பின்னர் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் எவ்வளவு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியான இன்று முதலே, விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை www.tnpsc.gov.in தளத்தில் அறியலாம்,.












Click it and Unblock the Notifications