நீங்கள் டபுள் டிகிரியா.. ரூ 1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. கரும்பு தின்ன கூலியா வேண்டும்?
சென்னை: தமிழகத்தில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணிக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 31 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தமிழக அரசு தேர்வாணையம் தகுதியுள்ள நபர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு நேர்காணல் நடத்தி அரசு பணிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தேர்வாணையம் முதல் கடை நிலை ஊழியர் முதல் முதல் நிலை ஊழியர், அதிகாரி வரை பதவிகளை பெறலாம்.

அது போல் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வுகளையும் இந்த தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த தேர்வாணையம் தற்போது புதிய பணிகளுக்கு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த அறிவிக்கை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 26ஆம் தேதியாகும். இந்த தேர்வுக்கு எம்எஸ்சி (ஃபாரன்சிக் சயின்ஸ் ) படித்திருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கு பதிவுக் கட்டணம்: 150 ரூபாய் ஆகும். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 150 ஆகும். பட்டியல் சாதியினர் / பட்டியல் சாதியினருக்கு (அருந்ததியர்கள்) தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். அது போல் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் - முழு விலக்கு, 3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / மறுக்கப்பட்ட சமூகங்கள் - மூன்று இலவச வாய்ப்புகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் தவிர) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - மூன்று இலவச வாய்ப்புகள், முன்னாள் ராணுவத்தினர் - இரண்டு இலவச வாய்ப்புகள், ஆதரவற்ற விதவைகளுக்க தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரிக்கு மாத சம்பளம் ரூ. 36,900- 1,35,100/- (நிலை-18) (திருத்தப்பட்ட அளவு) வழங்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு ஆகும். அதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்படும். அவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications