டிஎன்பிஎஸ்சி நடத்திய அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து.. மறுதேர்வு எப்போது? மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு உள்ள காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். இதற்கிடையே கடந்த டிசம்பர் 14ம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர்க்கான தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வை ரத்து செய்வதாகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் அறிவித்துள்ளார். அடுத்தாண்டு பிப். மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பணிக்கான காலியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நடத்தப்படும்.

TNPSC Cancels Assistant Advocate Exam New Dates Announced for Re-Examination

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி கடந்த டிச. 14ம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு நடந்தது. இதற்கிடையே அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அடுத்தாண்டு பிப். மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்: இது தொடர்பாகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர். நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4,186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.

தேர்வு ரத்து: சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாகப் பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.

மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+