வாழ்க்கையே மாறப் போகுது.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை! TNPSC தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், அசிஸ்டன்ட் டைரக்டர், சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப Combined Technical Service Exam அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான Combined Technical Service Exam தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 70 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு
Accounts Officer - 8, Assistant Director - 26 (Agriculture), Assistant Manager - 9 (Accounts), Assistant Manager - 3 (Legal), Senior Accounts Officer - 2, Senior Officer (Finance) - 21, Senior Officer (Legal) - 1 என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் மற்றும் சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் போன்ற பணிகளுக்கு CA அல்லது Cost Accountant தகுதி அவசியம். அதிலும் சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் பணிக்காக இரண்டு வருட பணி அனுபவம் இருந்தால் தான் விண்ணப்பிக்க முடியும். விவசாயத் துறையில் அசிஸ்டன்ட் டைரக்டர் பொறுப்புக்கு M.Sc. Agriculture Extension அல்லது Agriculture Economics படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு
மேலும் சட்டத்துறையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள பணிகளுக்கு BL அல்லது LLB பட்டம் அவசியம். குறிப்பாக Assistant Manager (Legal) பணிக்காக சட்டப் பட்டத்துடன் குறைந்தது 5 வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுபவமுள்ளவர்களுக்கு அரசு சேவையில் சேர சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
சம்பள விகிதம்
ஊதிய விவரத்தைப் பார்க்கும் போது. ரூ.66,200 முதல் ரூ.86,300 வரை வழங்கப்பட உள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற சமூகப்பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் தனிப்பட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு முறை
இந்தத் தேர்வில் முதலில் தமிழ் திறன் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு, பின்னர் முக்கியப் பாடத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களும், பின்னர் நேர்முகத் தேர்வும் சேர்த்து இறுதி தேர்வு செய்யப்படும். தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதால், விண்ணப்பிப்போர் இதற்கான தயாரிப்பை தவறாமல் செய்ய வேண்டும்.
தேர்வு தேதி
தமிழ் மொழித் திறன் தேர்வு 07 மார்ச் 2026-ஆம் தேதியும், மெயின் தேர்வு 08 மார்ச் 2026-ஆம் தேதியும் நடத்தப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் SC/ST/SCA/PwD மற்றும் விதவைகள் கட்டண விலக்கு பெறலாம். இதற்கு முன் One Time Registration செய்யாதவர்கள் தனியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 1தமிழ் மொழித் தேர்வு: 07.03.2026 அன்றும், மெயின் தேர்வு: 08.03.2026 அன்றும் நடக்கிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications