654 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு.. இன்டர்வியூ கிடையாது! ஒருநாள் தான் டைம் இருக்கு! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், என மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித்தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமே நிரப்பப்படுகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு தோறும் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

TNPSC Job Employment

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஒருநாள் தான் அவகாசம் உள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பித்துவிடுங்கள். கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், திட்டமிடல் அதிகாரி, வேதியியியல் அதிகாரி, புள்ளியில் அதிகாரி, ஜூனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 53 அதிகாரிகள் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பணிக்கு தகுந்தபடி மாறுபடும். அதாவது துறைசார்ந்த பிரிவில் இளநிலை டிகிரி முடித்து இருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். எனினும் அரசு அறிவித்துள்ள சலுகைகள் வயது உச்ச வரம்பில் உண்டு.

இஸ்ரோவில் வேலை.. பெங்களூரில் பணியிடம்! மாதம் 69 ஆயிரம் சம்பளம்.. 10+ ஐடிஐ முடிச்சவங்க அப்ளை பண்ணுங்க?
தேர்வு முறை: தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு என இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். தாள் ஒன்று என்பது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் தகுதியை உறுதி செய்யும் வகையில் தேர்வு இருக்கும். அக்டோபர் 26ம் தேதி இந்த தேர்வு நடைபெறும். தாள் 2 -க்கான தேர்வு வரும் அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும்.

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 24.08.2024- கடைசி நாளாகும். அதாவது நாளைதான் கடைசி நாள். ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் https://tnpsc.gov.in/Document/tamil/09_2024_CTS_NONOT_TAMIL_.pdf செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+