330 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் சான்ஸ்
சென்னை: கால்நடை உதவி டாக்டர், உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 32 பதவிகளில் 330 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் கல்வித்தகுதி என்ன என்பன போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. துறை வாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்றபடி அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது.

தமிழக அரசுதுறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பினை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், தான் நேர்முகத்தேர்வுடன் கூடிய ஒருங்கிணைந்த டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
கால்நடை உதவி டாக்டர், உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குனர் (புள்ளியியல்) உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேர்முக தேர்வும் உண்டு. இந்த பணியிடங்களுக்கு வரும் 13 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 11 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என 2 நிலைகளை கொண்டது.
கல்வி தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். தமிழ் ரிப்போர்ட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். அரசு நடத்தும் டெக்னிக்கல் தேர்வு ஆன ஷார்ட் ஹேண்ட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 120 வார்த்தைகள் ஒரு நிமிடத்திற்கு எழுதும் திறன் அவசியம். தமிழ் டைப்பிங்கில் சீனியர் கிரேடு முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ரிப்போர்ட் அளிக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வை பொறுத்தவரையில், தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு தரத்தில் தேர்வில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள் ஓடிஆர் எனப்படும் ஒரு முறை பதிவுக்காக ரூ.150 செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தேர்வர்கள் இது பற்றிய முழுவிவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/Document/english/CTS%20English%202025_.pdf
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications