டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. இன்னும் 5 நாள்தான் டைம் இருக்கு.. அப்ளை பண்ணவங்க இதை பண்ணிடுங்க
சென்னை: விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்பப்படுகிறது. குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியானதும் அதற்கு தயாராகிக் கொண்டு இருந்தவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
அப்ளை செய்தவர்கள் தங்கள் விண்ணப்பம் சரியாக உள்ளதா என மீண்டும் ஒருமூறை செக் செய்து கொள்ளவும். ஒருவேளை திருத்தம் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்றால், மே மாதம் 29 ஆம் தேதி முதல் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம்.

3,935 காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் அரசு பணி கனவுடன் இருப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது குரூப் 4 தேர்வுதான். டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுகளை பல லட்சகணக்கான தேர்வர்கள் எழுதுகிறார்கள். பெரிய திருவிழா போல நடக்கும் இந்த குரூப் 4 தேர்வை எழுத முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எழுதுகிறார்கள்.
ஒரு பைசா லஞ்சம் கொடுக்கவேண்டியது இல்லை. சிபாரிசுக்காக யாரையும் தேடி அலைய வேண்டியது இல்லை. படித்து போட்டி தேர்வில் வென்றால் நிச்சயம் டிஎன்பிஎஸ்சியில் வேலை உண்டு என்பதால் பல தேர்வர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருப்பது இந்த குரூப் 4 தேர்வுதான். இதனால், கடுமையான போட்டி தேர்வர்கள் மத்தியில் இருக்கும்.
அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன்னும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம்
தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 24 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 5 நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம். இந்த புகைப்படத்தை விண்ணப்ப பதிவின் போது அப்லோடு செய்ய வேண்டும்.
தேர்வு எப்போது நடைபெறும்?
அதேபோல, சான்றிதழ் எண், விண்ணப்பிக்கும் பதவி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட வேண்டும். www.tnpscexams.in என்ற இணையதளத்தில் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மே மாதம் 29 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
பணியிடங்கள் விவரம்:
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலிப்பணியிடங்களும், இளநிலை உதவியாளர் - 1621, இள நிலை உதவியாளர் பிணையம் பணிக்கு 46, தட்டச்சர் பணி 1099, சுருக்கெழுத்தர் பணி 335, நேர்முக எழுத்தர் 2, வனக் காப்பாளர் பணி 35, வனக் காவலர் பணி 50, என 3935 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications