டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராவது எப்படி? இதை செஞ்சீங்கன்னா.. ஈசியா வேலையை தட்டி தூக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. குரூப் 4 தேர்வுக்கு பல லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில், இந்த தேர்வில் வெற்றி பெற தேர்வர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்து கல்வியாளர்கள் தந்த சில தகவல்களை பார்க்கலாம்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கு ஏற்றார் போல் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

tnpsc-group-4-exam-how-to-succeed-in-the-exam-here-are-some-tips

டிஎன்பிஎஸ்சி குரூப் 4

குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். அரசு வேலை கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் இந்த தேர்வை பெரிதும் எதிர்பார்த்து படித்து வருகிறார்கள்.

குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவி அலுவலர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் கூட முதுகலை பட்டம், பிஎச்டி முடித்தவர்கள் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதை பார்க்க முடியும்.

தேர்வு அறிவிப்பு

சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள். கடந்த முறை 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி குரூப் 4 தேர்வுக்கு போட்டி தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், இந்த மாத துவக்கத்தில் இருந்தே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான், கடந்த 25 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

எப்படி படிக்க வேண்டும்?

மொத்தம் 3,935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 24 ஆம் தேதி கடைசி நாளாகும். குரூப் 4 தேர்வுக்கு பல லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிப்பார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற தேர்வர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்து கல்வியாளர்கள் தந்த சில தகவல்களை பார்க்கலாம்..

மாவட்ட சுற்றுலா அதிகாரியான அரவிந்த் குமார், குரூப் 4 தேர்வுக்கு வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

வாழ்க்கை மாற்றம் நிச்சயம்

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள்-1
1. தினமும் 8 மணி நேர படிப்பு அவசியம்
2. தமிழ் மற்றும் கணித பாடத்திலிருந்து அதிக அளவில் வினாக்கள் கேட்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் இந்த பாடத்திற்கு நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும்.

3. அதிக அளவில் பயிற்சி தேர்வுகள் (TEST PRACTICE) எடுக்க வேண்டும்.
4. பள்ளிப் பாட புத்தகங்களில் இருந்து (6-12) அதிக வினாக்கள் கேட்பதால் பள்ளிப் பாட புத்தகத்தை SYLLABUSக்கு ஏற்ப படிக்க வேண்டும்.
5. நேரத்தை முழுமையாக இந்த தேர்விற்காக பயன்படுத்தும் போது வாழ்க்கை மாற்றம் நிச்சயம். இவ்வாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+