TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே ரெடியா? நாளை வரும் முக்கிய அறிவிப்பு! காலிப்பணியிடங்கள் எத்தனை இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் குரூப் 4 தேர்வில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 5,300 பணியிடங்களும், 2024 ஆம் ஆண்டு 4,662 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. கால அட்டவணைப்படி குரூப் 1, குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளை குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 exam notification to be released tomorrow Aspirants expects vacancies will increase

டிஎன்பிஎஸ்சி குரூப் 4

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலேயே அதிகம் பேர் எழுதும் தேர்வாக இருப்பது குரூப் 4 தேர்வுதான். விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடுகின்றன. 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட இந்த தேர்வுக்கு முதுகலை பட்டம், டாக்டர் பட்டம் முடித்தவர்கள் கூட விண்ணப்பிப்பதை பார்க்க முடியும்.

14 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த ஆண்டு கிட்டதட்ட14 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதி, தேவையான கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தால் நேரடியாக வேலை.. நேர்முத்தேர்வு எதுவும் கிடையாது என்பதால் இந்த தேர்வுக்கு போட்டி த்தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு சுமார் 5,300க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

கடந்த 2024 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் 4,662 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நடப்பு ஆண்டு 10 ஆயிரம் வரையிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆண்டு குரூப் 4 தேர்​வுக்கு 15 லட்சம் பேர் விண்​ணப்​பிக்​கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1 தேர்வுக்கு வெறும் 46 இடங்களே வெளியிடப்பட்டது தேர்வர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதேபோல, குரூப் 2 தேர்வுக்கு 846 காலியிடங்களே அறிவிக்கப்பட்டன.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?

இந்த இரண்டு பணியிடங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது தேர்வர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. எனவே, குரூப் 4 தேர்வு அறிவிப்பில் குறைந்தது 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று தேர்வர்கள் கூறியுள்ளனர். எனவே தேர்வர்களின் எதிர்பார்ப்பை டிஎன்பிஎஸ்சி பூர்த்தி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்சி ஆகிய நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​பப்​படும் என அண்​மை​யில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. எனவே இந்த பணியிடங்களும் இணைக்கப்பட்டு காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை பொறுத்தவரை டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+