TNPSC Group 4 தேர்வு- பதவிகள்- காலியிடங்கள்- யார் விண்ணப்பிக்கலாம்? ரூ16,600 - ரூ75,900 வரை சம்பளம்!
சென்னை: தமிழ்நாட்டின் பட்டதாரிகளின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளில் ஒன்றான TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNPSC Group 4 தேர்வு குறித்த 10 முக்கியமான பாயிண்டுகளை இதில் பார்க்கலாம்.

என்ன பதவிகளுக்கான தேர்வுகள்?
கிராம நிர்வாக அலுவலர் Village AdministrativeOfficer VAO
8 துறைகளில் இளநிலை உதவியாளர் Junior Assistant (Non-Security/Security)
5 துறைகளில் தட்டச்சர் Typist
சுருக்கெழுத்து தட்டச்சர்- III
சுருக்கெழுத்து தட்டச்சர் Steno-Typist (Grade - III)
நேர்முக உதவியாளர் (சுருக்கெழுத்து தட்டச்சர் II) Personal Assistant to
Chairman (StenoTypist II)
நேர்முக எழுத்தர் (சுருக்கெழுத்து தட்டச்சர் III) Personal Clerk to
Managing Director/General Manager (Steno Typist III)
தனிச் செயலாளர் (நிலை -III) Private Secretary (Grade-III)
இளநிலை செயல் பணியாளர் (அலுவலகம்) Junior Executive (Office)
இளநிலை செயல் பணியாளர் (தட்டச்சு) Junior Executive (Typing)
வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர் Receptionist cum
Telephone Operator
பால் அளவையாளர் (நிலை III) Milk Recorder, Grade III
ஆய்வக உதவியாளர்Laboratory Assistant
வரித் தண்டலர் Bill Collector
முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் Senior Factory Assistant
வனக் காப்பாளர் Forest Guard
ஓட்டுநர் உரிமத்துடனான வனக் காப்பாளர் Forest Guard with Driving Licence
வனக்காவலர்Forest Watcher
வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) Forest Watcher (Tribal Youth)
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் Junior Inspector of Cooperative
Societies
மொத்த பணியிடங்கள்- அதிகபட்ச காலியிடங்கள்
மொத்தம் 32 பதவிகள்
மொத்த பணியிடங்கள் 6,244
----------------------
அதிகபட்ச காலியிடங்கள்
விஏஓ பணியிடங்கள் 108
இளநிலை உதவியாளர் Junior Assistant (Non-Security/ 2442
தட்டச்சர் Typist Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative
Assembly Secretariat Service- 1653
சுருக்கெழுத்து தட்டச்சர் Steno-Typist (Grade - III) 441
வனக் காப்பாளர் Forest Guard 171
ஓட்டுநர் உரிமத்துடனான வனக் காப்பாளர் Forest Guard with Driving Licence 192
வனக்காவலர்Forest Watcher 526
வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) Forest Watcher (Tribal Youth) 288
குறைபட்ச ஊதியம் - அதிகபட்சம் ஊதியம்
TNPSC குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றால் குறைந்தபட்ச ஊதியம் ரூ16,600 முதல் அதிகபட்சமாக ரூ 75,900 வரை பெறலாம். துறைகள், பதவிகள் சார்ந்து இந்த அடிப்படையில் ஊதியம் பெற முடியும்.
தேர்வுமுறை எப்படி இருக்கும்?
தமிழ் தகுதி தேர்வு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு- இதில் 40% அதாவது 60/100 மதிப்பெண் பெற்றால்தான் திறனறியும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability Test) வினாத்தாள் திருத்தப்படும்.
தமிழ் தகுதி தேர்வு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினாத்தாள் தமிழில் மட்டும் இருக்கும்.
திறனறியும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability Test) - தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும்
தேர்வு நேரம் 3 மணி நேரம்
மொத்த வினாக்கள் எண்ணிக்கை 200/ அதிகபட்ச மதிப்பெண்கள் 300/
அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90.
வயது வரம்பு என்ன?
விஏஓ, வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக்காவலர் (பழங்குடி இளைஞர்) தவிர இதர அனைத்து பணி இடங்களுக்கும் 01.07.2024-ல் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்/32 வயது நிறைவடைந்திருக்கவும் கூடாது.
விஏஓ, வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக்காவலர் (பழங்குடி இளைஞர்) பணியிடங்களுக்கு 01.07.2024-ல் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்/ 32 வயது நிறைவடைந்திருக்கவும் கூடாது.
வயது வரம்பு தளர்வு
அதேநேரத்தில் விஏஓ தேர்வுக்கு அதிபட்ச வயது வரம்பு 42 ஆகவும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இதர பணியிடங்களுக்கு ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 37/ பிசி,எம்பிசி, சீர்மரபினருக்கு 34 ஆகவும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
என்ன கல்வித் தகுதி
குறைந்தபட்ச பொது கல்வித் தகுதி (பிளஸ் 2) முதல் பட்டப்படிப்பு வரை. அதேபோல தட்டச்சு- டைப்பிங் தமிழ்- ஆங்கிலம் அரசு சான்றிதழ் பெற்றவர்கள் அதற்குரிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தல் முறை
www.tnpscexams.inwww.tnpsc.gov.in
ஆகிய இணையதளங்கள் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு மையங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பாலான தாலுகா தலைமை இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் எனில் ஆத்தூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, குஜிலியம்பாறை, வேடசந்தூர், கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பித்தல் எப்போது?
இன்று முதல் பிப்ரவரி 28-ந் தேதி பிற்பகல் 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை திருத்தும் காலம் மார்ச் 4-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை
தேர்வு எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9-ந் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
இதர கூடுதல் விவரங்களை கீழே உள்ள பிஎடிப்-ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications