TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. பணியிடங்கள் எண்ணிக்கை அதிரடியாக உயர்வு!
சென்னை: டிஎன்பிஎஸ்சி (TNPSC Group 4) எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான ரிசல்ட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கான கனவில் இருக்கும் தேர்வர்கள் பெரும்பாலானோருக்கு கலங்கரை விளக்கமாக டிஎன்பிஎஸ்சி உள்ளது. டிஎன்பிஎஸ்சி conduct குரூப் தேர்வுகளில் குரூப் 4 தேர்வுகளுக்குதான் தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
பத்தாம் வகுப்பு கல்வி தகுதி, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் உடனே வேலை என்பதால் அரசு பணிக்காக படித்து வரும் பல லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வுகளை பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.
தேர்வு கடினமாக இருந்தது
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த 25.04.2025 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை எழுத 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி இருந்தது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
தேர்வை 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். பாடத்திட்டங்களை தாண்டி தேர்வு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இருந்தபோதிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைக்குறிப்பு வெளியிட்டு தேர்வு ரிசல்ட் வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டது.
தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இதனால் தேர்வர்கள் மத்தியில் ரிசல்ட் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, இந்த முறை பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைவாக இருந்ததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில்தான் தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது.
கூடுதலாக 727 காலிப் பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (26.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது ரிசல்ட் வெளியாகும்?
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் சமீப நாட்களாக தேர்வு முடிந்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படுகின்றன. இதனால் இந்த குரூப் 4 தேர்வும் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிசல்ட் வெளியாக வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில்தான் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நாளை (28.09.2025) நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications