கடைசியாக ஒரு சான்ஸ்! இரவோடு இரவாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மேஜர் அறிவிப்பு! குரூப் எழுதுபவர்கள் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சியின் குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தேர்வு ஆணையம் வெளியிட்டு உள்ளது.

குரூப் தேர்வுகளில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த அறிவிப்பு இரவோடு இரவாக வெளியிடப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறுகிறது. அதன்படி இவர்களுக்கு இறுதி வாய்ப்பாக மீண்டும் ஆவணங்களை அப்லோட் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

tnpsc jobs

இருந்தாலும் சரியான சான்றிதழை முழுமையாக பதிவேற்றம் செய்வதற்காக கூடுதல் வாய்ப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை அப்லோட் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.

இதற்கு சான்றிதழ் பதிவேற்ற உத்தரவிடப்பட்ட நிலையில் பலர் சரியாக பதிவேற்றவில்லை என்பதால் தற்போது கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வருகிற 15ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் : தமிழ்நாட்டில் அடுத்த 2 வருடங்களில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

குரூப் தேர்வு மட்டுமின்றி பல தேர்வுகள் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நடக்கும் குரூப் தேர்வுகள் மூலம் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

மற்ற தேர்வுகள்: கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+