டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித்தேர்வு இன்று தொடக்கம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான நேர்முகத் தேர்வு அல்லாத 654 காலிப்பணியிடங்களுக்கு இன்று முதல் போட்டித்தேர்வுகள் நடக்கின்றன. வரும் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 மையங்களில் கணினி வழித்தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 13,425 பேர் உள்பட மொத்தம் 95,925 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
சென்னை: 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், என மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித்தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக, தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு தோறும் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டித்தேர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. உதவி பொறியாளர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குநர், திட்டமிடல் அதிகாரி, வேதியியியல் அதிகாரி, புள்ளியில் அதிகாரி, ஜூனியர் மேனேஜர் பல்வேறு அதிகாரி பணியிடங்கள் என மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 95,925 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு என இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். தாள் ஒன்று என்பது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் தகுதியை உறுதி செய்யும் வகையில் தேர்வு இருக்கும். இந்த நிலையில் இன்று இந்த தேர்வு தொடங்குகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை இந்த தேர்வானது நடைபெறுகிறது. சென்னையில் 13,425 பேர் உள்பட மொத்தம் 95,925 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இதற்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 161 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 161 மையங்களில் கணினி வழியாக தேர்வு நடைபெறுகிறது.
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications