தமிழ்நாடு மின்துறையில் வேலை.. 418 பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செம அறிவிப்பு! நோ இண்டர்வியூ
சென்னை: தமிழ்நாடு மின் துறையில் 418 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஸ்சிஸ்டன்ட் என்ஜினியர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. நேர்முகத் தேர்வு இன்றி தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இண்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர் உள்ளிட்ட இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

மொத்தம் 615 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த நேர்முக்த்தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுகளுடன் தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 416 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அஸ்சிஸ்டன்ட் என்ஜினியர் - 391
அஸ்சிஸ்டண்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் - 25 என 416 பணியிடங்கள் தமிழக மின் துறையில் நிரப்பப் படுகின்றன.
அதுபோக தமிழக ரப்பர் கழகத்தில் ஒரு உதவி புரோகிராமர் மற்றும் தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனத்தில் ஒரு அக்கவுண்டண்ட் என மொத்தம் 2 பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 615 பணியிடங்கள் மற்றும் தற்போது சேர்க்கப்பட்டு இருக்கும் 418 பணியிடங்கள் என மொத்தம் 1033 பணியிடங்கள் இந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
அஸ்சிஸ்ட்ண்ட் என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். அல்லது தமிழ்நடு மின்சார வாரியத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
அக்கவுண்டண்ட் பணிக்கு பிகாம் டிகிரி முடித்து இருக்க வேண்டும். சிஏ தேர்வில் இடைநிலை தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
34 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடபெறும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிபப்டையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.
தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/Document/English/addendum%209A-2025%2011.06.2025.pdf
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications