Vanni Arasu: எல்லாருக்கும் எலும்புகள் உண்டு.. விஜய்யை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் வன்னி அரசு காட்டமாக பதிலடி
சென்னை: எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்துக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார் எனவும், அவர் மீது சட்டப்பேரவை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னி அரசு கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். இது குறித்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில் இன்று அதிகாலையில் விளாத்திக்குளம் போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் வன்னி அரசு பதிலடி
மார்க்கண்டேயன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்பி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். எல்லாருக்கும் எலும்புகள் உண்டு என அவர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
வன்முறையை தூண்டும் வகையில்
"சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்" என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
எலும்புகள் எல்லாருக்கும் உண்டு
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
போலீஸ் அராஜகம் ஒழிக..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் மிரட்டும் தொனியிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவெகவினர் விளாத்திக்குளம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இன்று அதிகாலையிலேயே வீட்டிற்கு சென்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டதும் தூத்துக்குடி எஸ்பி ஆபிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இச்சம்பவத்திற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மு.க ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் தூத்துக்கு எஸ்பி ஆபிஸ் சென்று மார்க்கண்டேயனை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். வழக்கறிஞர்களை கூட உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறினர். இதனால் போலீசார் அராஜகம் ஒழிக என்று அவர்களது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
" title="விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைதுக்கு பாஜக வரவேற்பு.. கையோடு விஜய்க்கு வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications