நடிகை நக்மாவா இது? ரஜினி பாட்டை செமையா பாடுறாரு! ஆளே அடையாளம் தெரியலையே? ரசிகர்களின் ஒரே ரெக்வெஸ்ட்
சென்னை: 90ஸ்களின் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளின் நக்மாவுக்கு தனி இடம் உண்டு. ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, கார்த்திக், அர்ஜுன் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவில் இருந்து விலகினார். அதற்குப் பிறகு நக்மா இப்போ எங்கே இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலகி வருகிறது.
நடிகை நக்மாவின் தற்போதைய நிலை
அந்த வீடியோவில் பிங்க் கலர் புடவையில் நடிகை நக்மா உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென "ஸ்டைலு ஸ்டைலுதான் சூப்பர் ஸ்டைல் தான் அந்த ஸ்டைலுக்கேத்த மைலு நானு தான்" என்று ரஜினிகாந்தின் பிரபல பாடலை பாடி டான்ஸ் ஆடுகிறார். அதோடு ரஜினியின் இன்னும் சில பாடல்களையும் ரசிகர்களுடன் சேர்ந்து பாடியதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் உற்சாகமாக கைதட்டி ரசித்தனர். இந்த காட்சிதான் இப்ப சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சினிமாவை விட்டு விலகினாலும் ரஜினி மீது உள்ள அன்பு மட்டும் குறையல போல. இப்போதும் அதே எனர்ஜி... நக்மாவை மீண்டும் சினிமாவில் பார்க்கணும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நக்மாவின் ஆரம்ப காலம்
மும்பையை சார்ந்த சேர்ந்த நக்மா 90ஸ்களில் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பேஜ்புரி என பல மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருந்தார். ரஜினியுடன் நடித்த பாட்ஷா, சரத்குமாருடன் ஜானகிராமன், பிரபுதேவாவுடன் காதலன், கார்த்திக் உடன் மேட்டுக்குடி, பிஸ்தா, அஜித்துடன் சிட்டிசன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

சினிமாவை விட்டு விலகல்
சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது நக்மா அரசியலிலும் சமூகப் பணிகளிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைத்துக் கொண்டு முழுமையாக திரைப்படங்களில் இருந்து விலகி விட்டார். போன வருஷம் தன்னுடைய சகோதரியான ஜோதிகாவின் குழந்தைகள் ஸ்கூல் நிகழ்ச்சியில் நக்மாவும் கலந்து கொண்டார்.

அப்போது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரல் ஆனது. அதற்கு பிறகு இப்போது ரஜினி பாடலை பாடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய படங்களில் நடிப்பை பற்றி பேசி வருகின்றனர். மீண்டும் சினிமாவுக்கு வருவாரா? என்பதுதான் பலருடைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.













Click it and Unblock the Notifications