ஆணுறையை முகத்தில் வீசினார்.. ரகசிய வீடியோ எடுத்து கணவருக்கே அனுப்பினார்! பெண் ஐபிஎஸ் அதிகாரி பகீர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சக ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூமிற்குள் அழைத்து தன்னை தகாத முறையில் தொட முயன்றதாகவும் ஆணுறைகளை தன் மீது தூக்கி எரிந்ததாகவும் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பரபர புகாரை கொடுத்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பரபர புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னுடன் பயிற்சி பெற்று வந்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தன்னை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பியதாகப் புகார் அளித்துள்ளார்.

Hyderabad police crime ias

புகார்

புகாரளித்துள்ள அந்த 30 வயதான ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி, இப்போது ஹைதராபாத் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில வாரங்களாக சக ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி ஒருவர் தொடர்ந்து தன்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வந்ததாக அவர் ஜூலை 18ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

அந்த பெண் அதிகாரி அளித்த புகாரில், "கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் இந்த தொல்லை தொடங்கியது. அன்றைய தினம், வாட்ஸ்அப் மூலம் பாலியல் ரீதியாக ஆபாசமான மற்றும் தரக்குறைவான மெசேஜ் அனுப்பினார். பிற பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் முன்னிலையில் என்னை இழிவாகவும் பேசினார். மேலும், மற்றொரு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி, அதை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். தொடர்ந்து அவதூறு பரப்பினார்.

தாக்குதல்

அத்தோடு எனது செல்போனை வலுக்கட்டாயமாக கைப்பற்றி, அதில் உள்ள தனிப்பட்ட சாட்களை காட்டுமாறு கட்டாயப்படுத்தினார். குறிப்பாக, ஜூலை 8ஆம் தேதி எனது செல்போனை எடுத்துச் சென்று, பாஸ்வோர்ட் சொல்லும்படி மிரட்டினார். ஜூலை 9ஆம் தேதி இந்த தொல்லை மேலும் தீவிரமடைந்தது. அன்றைய தினம் அந்த நபர், என்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கினார். தலைமுடியைப் பிடித்து இழுத்ததுடன், கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றார். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அறையை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்தார்.

ஆணுறைகள்

மேலும், அப்போது ஆணுறைகள் அடங்கிய பாக்கெட்டுகளை என் மீது தூக்கி எரிந்தார். அடுத்த நாள் ஜூலை 10ஆம் தேதியும் மீண்டும் என்னை தாக்கி, தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார்" என்று கூறியுள்ளார். மேலும், தனது அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது கணவருக்கு அனுப்பி மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போலீஸ் வழக்குப்பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான ஆதாரங்கள், டிஜிட்டல் ஆதாரம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+