Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.36,900 டூ ரூ.1.36 லட்சம் வரை சம்பளம்.. ஜூனீயர் சயின்டிபிக் அலுவலர் பணிக்கு அழைக்கும் டிஎன்பிஎஸ்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர்கள்(Junior Scientifi Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

 TNPSC Junior Scientific Officer recruitment under Tamil Nadu Forensic sciences suboridnate service

டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர்கள் (Junior Scientific Officer for Tamil Nadu Forensic sciences subboridnate service) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. துறைவாரியாக பிரித்து பார்த்தால் வேதியியல் பிரிவில் 20 பேர், உயிரியல் பிரிவில் 4 பேர், இயற்பியல் பிரிவில் 3 பேர், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் 4 பேர் என மொத்தம் 31 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிரவிடார்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தடயஅறிவியல் பிரிவில் எம்எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி பிரிவில் வேறு பிரிவில் எம்எஸ்சி பிரிவில் Biology, Chemistry, Physics, Computer Forensic Science படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.36,900 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 100 வரை சம்பளம் கிடைக்கும்.

 TNPSC Junior Scientific Officer recruitment under Tamil Nadu Forensic sciences suboridnate service

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.tnpscexams.in அல்லது www.tnpsc.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய மே மாதம் 26ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்ய பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வோர் கணினி வழித்தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி வழித் தே்வு தாள் I(முதுநிலை பட்டப்படிப்பு தரம்) தேர்வு 23.07.2023 காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தாள் II(கட்டாய தமிழ் மொழித்தேர்வு) தேர்வானது அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+