ரூ.2.05 லட்சம் வரை சம்பளம்.. பொதுப்பணி உள்பட பல துறைகளில் 369 காலியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர் உள்பட வெவ்வேறு பதவிகளுக்கு 369 பேருக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 TNPSC recruitment 2023 for 369 vacancy including Assistant Engineer on Combined Engineering Service exam

இந்நிலையில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி தொழிற்பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் (பயிற்சி) பள்ளியின் முதல்வர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். உதவி பொறியாளர் (சிவில், நீர்வளத்துறை) பணிக்கு 4 பேர், உதவி பொறியாளர் (சிவில், பொதுப்பணித்துறை) பணிக்கு 5 பேர், உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) பணிக்கு ஒருவர், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பணிக்கு 52 பேர், உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பணிக்கு ஒருவர், உதவி பொறியாளர் (தொழில்துறை) பணிக்கு 9 பேர், உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்-பொதுப்பணித்துறை) பணிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் உதவி இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை) பணிக்கு 20 பேர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) பணிக்கு 8 பேர், உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்-டேன்ஜெட்கோ) பணிக்கு 36 பேர். உதவி பொறியாளர் (சிவில்-டேன்ஜெட்கோ) பணிக்கு 5 பேர், உதவி பொறியாளர் (சிவில்-தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுதவிர தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பணிக்கு 49, உதவி பொறியாளர் (சிவில்-தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்) பணிக்கு 78 பேர், உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்- தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிம் பணிக்கு 20 பேர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாளர் -பொறியியல் பணிக்கு 7 பேர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாளர் (சிவில்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்விதகுதி: ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கூற வேண்டும் என்றால் பிஇ பிரிவில் சிவில், அக்ரிகல்சர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், டெக்டைல் டெக்னாலஜி, இன்டஸ்ட்ரீயல் என்ஜினியரீங், புரோடக்சன் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரீங், பிஎஸ்சி அக்ரிகல்சர், முதுகலை படிப்பில் என்விரான்மென்டல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், எம்டெக் என்விரான்மென்டல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி உள்பட பிற பிரிவுகளில் என்ஜினியரீங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு வயது வரம்பு என்பது ஒவ்வொரு பணியை பொறுத்து மாறுபடுகிறது. பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சில பணிகளுக்கு இந்த வயது 32 வயதாகவும், 35 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டவகுப்பனர் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு என்பது கிடையாது.

மாதசம்பளம்: தொழிற்பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் (பயிற்சி) பள்ளியின் முதல்வர் பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி பொறியாளர், உதவி இயக்குனர் பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.1.38 லட்சத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும்.

முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரையும், டேன்ஜெட்கோ உதவி பொறியாளர் பணிக்கு ரூ.39,800 முதல் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 650 வரையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு ரூ.36,400, ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 200 வழங்கப்பட உள்ளது. பிற பணிகளுக்கு ரூ.37,700 முதல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை மாதசம்பளமாக கிடைக்கும்.

கட்டணம்: விண்ணப்ப பதிவுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறை கட்டணம் செலுத்த தேவையில்லை எனும் முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 நவம்பர் மாதம் 11ம் தேதிக்குள் tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 16.11.2023 முதல் 18.11.2023 ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு என்பது 2024 ஜனவரி 6ம் தேதி காலை, மதியம், ஜனவரி 7ம் தேதி காலை, மதியம் வேளைகளில் நடைபெற உள்ளது.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை தமிழில் காண Click Here

பணி தொடர்பான முழு அறிவிப்பை ஆங்கிலத்தில் காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+