மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குட் நியூஸ்! தூள் கிளப்புங்க
சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் (TNEB JOB) 1,794 கள உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அக் 2 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.. இந்த பணியிடங்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடங்கள் விவரம்
மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது மின்னியலில் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறாமல் அதே பாடப்பிரிவில் உயர் கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.
வயது வரம்பு, கல்வித் தகுதி:
வயது வரம்பை பொறுத்தவரை 32 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு அறிவிக்கை வெளியாகும் நாளன்று போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். பின்வரும் தகுதியைப் பெற்றிருக்கும் ஒருவர் தமிழில் போதிய தகுதி உடையவராகக் கருதப்படுவார்.
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் / உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் / மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் / பட்டப் படிப்பில், தமிழை ஒருமொழிப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது உயர்நிலை பள்ளிப்படிப்பை / பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்:
அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பெறும் இரண்டாம்நிலை மொழித் தேர்வில் (முழுத்தேர்வு) தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..ஒரு பதவிக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அக்கல்வித் தகுதியை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது அவ்வகுப்பில் அல்லது பட்டப்படிப்பு வரையிலான படிப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக பயின்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை வழங்கப்படும்.
தேர்வு நடைமுறை:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) - II, ஒரு படிநிலை எழுத்துத்தேர்வு உடையது. இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமைக்கோரல்களின் அடிப்படையில், தேர்வர் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வின் தாள் I மற்றும் தாள் II தேர்விலும் கலந்து கொள்வது கட்டாயமாகும். தாள் I மற்றும் தாள் II ஆகிய இரண்டிலும் கலந்து கொள்ளாத தேர்வர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கூட, தெரிவிற்கு கருதப்பட மாட்டார்கள்.
உடற்தகுதித் தேர்வு:
செயல்முறை I: கம்பம் ஏறுதல் மற்றும் குறுக்கு கை பொருத்துதல் - முதலில் மின் கம்பம் நிறுவப்பட்டுள்ள
நிலப்பரப்பில் பாதுகாப்பிற்காக இடுப்புக் கயிறை முறையாக இடுப்பில் கட்டிக்கொண்டு 9 மீட்டர் முன்னழுத்தப்பட்ட கலவை (PSC) மின் கம்பத்தில் (30 அடி கம்பம்) மும்முனை குறுக்கு கை கட்டப்பட்டுள்ள கயிற்றின் மறுமுனையினை எடுத்துக்கொண்டு ஏறவேண்டும். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கம்பத்தில் கால் வைப்பதற்கான கட்டையினை கட்டி, தனது இடுப்பு கயிற்றினையும் கம்பத்தில் கட்ட வேண்டும்.
அதன்பின் மும்முனை குறுக்கு கை-ஐ சரியாகப் பொருத்தி மீண்டும் நிலப்பரப்பிற்கு வரவேண்டும். குறுக்கு கை-ஐ கம்பத்தின் மேல் பகுதியில் இருந்து ஏறக்குறைய 1 அடி தூரத்தில் பொருத்துதல் வேண்டும். மேற்கண்ட செயல்முறையினை 8 நிமிட கால அவகாசத்திற்குள் மற்றும் ஒரே வாய்ப்பில் முடித்தல் வேண்டும்.
5.6.2 செயல்முறை II: அலுமினிய மின் கடத்தியில் (AAAC 7/3.15) உலோக பாகங்களில் (Creeper set) மற்றும் disc-ல் முறையாக பொருத்த வேண்டும். மின் கடத்தியை உலோக பாகத்தில் (Creeper set) முறையாக பொருத்திய பின்னர், மின் கடத்தியினை இணைத்து 20 சுற்றிற்கு குறையாமல் பிணைத்தல் (binding) வேண்டும். மேலும், இழுவை கயிற்றினை அலுமினிய கம்பியுடன் பின்னவேண்டும். மேற்கண்ட செயல்முறையினை 2 நிமிட கால அவகாசத்திற்குள் மற்றும் ஒரே வாய்ப்பில் முடித்தல் வேண்டும்.
5.6.3. செயல்முறை III: மூன்று எண்ணிக்கை கொண்ட 3 % அடி "V" குறுக்கு கை-ஐ (சுமார் 35 கி.கி) எடுத்துக் கொண்டு 100 மீட்டர் தூரத்தினை ஒரு நிமிடத்தில் பளுவினை கீழே வைக்காமல் (ஒரே வாய்ப்பில்) கடந்து செல்ல வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு வரும் 2.10.2025 கடைசி நாளாகும். போட்டித்தேர்வு வரும் 16.11.2025 அன்று நடைபெறும். காலை நேரத்தில் தமிழ் தகுதி, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வும், பிற்பகலில் தொழிற்பிரிவு மின் பணியாளர் மற்றும் கம்பியாள் தேர்வு ம் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications