டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு.. 61 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்
சென்னை: சட்டம் படித்தவர்களுக்கான தேர்வு அறிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 Assistant Public Prosecutor பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎன்பிஸ்சியே நிரப்பி வருகிறது.

அரசு உதவி வழக்கு நடத்துநர்
தமிழக அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில்தான், சட்டம் படித்தவர்களுக்கான தேர்வு அறிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதாவது, குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை II பதவிக்கான 61 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 02:12.2025 முதல் 31.12.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
கல்வித் தகுதி என்ன?
முதல்நிலைத் தேர்வு 15.02.2026 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை சட்டம் ( B.L) முடித்து இருக்க வேண்டும். கிரிமினல் நீதிமன்றங்களில் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்து இருப்பது கட்டாயம்.
வயது வரம்பு
தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது அவர்கள் குற்றவியல் நீதி மன்றங்களில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வழக்கு நடத்தியிருந்தார் என்ற உரிமை கோரலுக்கு ஆதாரமான பயிற்சி சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். முதுநிலை சட்ட படிப்பிற்கான காலம் வழக்கு நடத்தியதற்கான பயிற்சி காலத்திலிருந்து நீக்கப்பட மாட்டாது.
தேர்வின் உரிமைக் கோரல்களுக்கு ஆதாரமாக உள்ள சான்றுகளை பதிவேற்றம் செய்யத் தவறினால் அத்தேர்வரின் விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை 26 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31.12.2025 கடைசி நாளாகும். https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதிசெய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/document/tamil/app_18_2025_tamil1.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications