மாதஊதியம் ரூ.56,100 டூ ரூ.2.05 லட்சம்.. சென்னையில் சுற்றுலா அலுவலராக ரெடியா? டிஎன்பிஎஸ்சி அழைப்பு
தமிழ்நாட்டில் சுற்றுலா அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள சுற்றுலா அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.2.05 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பணியை நிரப்பும்போதும் அதுதொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சுற்றுலா அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 3 சுற்றுலா அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சென்னையிலேயே பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சுற்றுலா சார்ந்த பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு என்ன?
மேலும் விண்ணப்பத்தாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 32 வயதுக்குள் விண்ணப்பத்தாரர்கள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) பிரிவினருக்கு வயது வரம்பு என்பது கிடையாது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
மேலும் விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.200 என மொத்தம் ரூ.350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications