திருப்பத்தூரில் அரசு வேலை! டிரைவிங் தெரியுமா? மாதம் 58 ஆயிரம் வரை சம்பளம்.. 8ம் வகுப்பு தகுதி போதும்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் என 24 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு கல்வி பெற்றிருந்தாலே இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தை காணலாம்
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் 11, ஜீப் டிரைவர் 09, ரெக்கார்ட் கிளர்க் 02, இரவு காவலர் 02 என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். ஜீப் டிரைவர் பணிக்கு 8ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
வயது வரம்பு: மேற்கூறிய அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18-வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32 க்கும் மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும். அதாவது பிசி, எம்.பி.சி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது 34 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். அதேபோல், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது உடையோர் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,700 - 58,100
ஜீப் டிரைவர்: ரூ.19,500 - 71,900
ரெக்கார்டு கிளர்க்: ரூ.19,500 - 58,500
நைட் வாட்ச்மேன்: ரூ.15,700 - 58,100
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அதில் கேட்கப்பட்டுள்ள உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். பதிவஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்க வரும் 30.10 .2023 கடைசி நாளாகும். எனவே அதற்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம் (E பிளாக்) ,மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர் -635601 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf கிளிக் செய்யும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications