டிகிரி மட்டும் முடிந்திருந்தால் போதும்.. மதுரை மாவட்டத்திலேயே சூப்பர் வேலை.. வெளியான புது அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிஎன்எஸ்ஆர்எல்எம் (TNSRLM) எனும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (Tamil Nadu State Rural Livelihood Mission Madurai)காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மதுரை டிஎன்எஸ்ஆர்எல்எம் பிரிவில் பிளாக் ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணி நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பிளாக்(வட்டார) ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு ஒருவர், செல்லம்பட்டிக்கு 2 பேர், கள்ளிக்குடி, டி கல்லுப்பட்டிக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி 3 மாத எம்எஸ் ஆபிஸ் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணினி அறிவியில், பிற கணினி சார் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் வயது என்பது அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி தற்காலிகமானது என்ற நிலையில் அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் ஆப்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications