Job Alert:எழுத்துத்தேர்வு இல்லை.. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள வேலைகள்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க அக். 16 கடைசி தேதியாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கடைசி தேதி வரும் அக். 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத்தேர்வுகள் எதுவும் இல்லை என்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,
மொத்த காலியிடங்கள் - 234
பணி - Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
பணி இடம் - தமிழ்நாடு முழுவதும் (கோவை, கும்பகோணம், விழுப்புரம், நெல்லை, நாகர்கோவில் பணிமனைகள்)
கல்வித் தகுதி: Graduate Apprentice பணியிடத்திற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது டெக்னாலஜி பாடங்களில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice பணியிடத்திற்கு பொறியியல் அல்லது டெக்னாலஜி பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: தமிழக அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு இல்லை. பெறப்படும் விண்ணப்பங்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்படும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம் - இல்லை
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடைசி தேதி 31/10/2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf
விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications