Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.75,900 வரை சம்பளம்.. 1,768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள்.. டிஎன்டிஆர்பி மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த தேர்வு வாரியம் டெட் தேர்வை நடத்துகிறது.

 TNTRB Recruitment 2024 for 1768 Secondary Grade Teacher post salary upto Rs.75,900 per month

இதுதவிர இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், வேளாண் பயிற்றுநர்கள், தொகுதி கல்வி அதிகாரிகள் என பல்வேறு பரிவு பணிக்கு தேர்வானவர்களை நியமனம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

காலியிடங்கள்: இந்நிலையில் தான் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teacher) பணியிடங்ளை நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,729 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 39 பணியிடங்கள் Backlog முறையில் வைக்கப்பட்டுள்ளன.

துறை வாரியாக: துறை வாரியாக பார்த்தால் தமிழுக்கு 1,388 பேர், தெலுங்கு மொழிக்கு 75 பேர், உருது மொழிக்கு 35 பேர், கன்னட மொழிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Backlog காலியிடங்களை பொறுத்தமட்டில் தமிழ் 19, சிறுபான்மை மொழிகளான உருதுக்கு 15 இடம், தெலுங்கு, கன்னடாவுக்கு தலா 2 பேர், மலையாளத்துக்கு ஒரு இடம் என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி வயது சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி எஸ்சி, எஸ்டி, பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வயது வரை தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி - மாத சம்பளம்: விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்து D.El.Ed, D.Ed, B.El.Ed படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,600 சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.75,600 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் https://www.trb.tn.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிடபிள்யூடி பிரிவினர் என்றால் ரூ.300 விண்ணப்ப கட்டணமாகும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
OMR Based தேர்வானது வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+