அரசு கல்லூரிகளில் வேலை.. உதவி பேராசிரியர் பணியிடங்கள்! மாதம் 2 லட்சம் சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: அரசு சட்டக்கல்லூரியில் காலியாக இருக்கும் 132 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியமான (TRB) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இணைப் பேராசிரியர் - 8
உதவிப் பேராசிரியர் - 64
உதவிப் பேராசிரியர் (Pre - Law)- 60 என மொத்தம் 132 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து சட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். சட்டத்தில் முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களைப் பெறலாம். எஸ்சி, எஸ்டி தேர்வர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. எனினும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனித் தேர்வராகவோ, தொலைதூரக் கல்வி வயிலாகவோ சட்டம் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சட்டக் கல்லூரியில் பணியாற்றி இருக்க வேண்டும். சட்டக்கல்லூரி , பல்கலைக்கழகங்களில் துறை சார்ந்த பிரிவில், 8 ஆண்டுகளுக்கு குறையாமல் கற்பித்தலில் அனுபவம் இருத்தல் அவசியம். நெட் அல்லது செட் தேர்விலும் தேர்ச்சி அவசியம். உதவி பேராசிரியர் ( pre law) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். இதர இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?:
* இணைப் பேராசிரியர் - ரூ.1,31,400-2,17,100/-
* உதவிப் பேராசிரியர் - ரூ.68,900-2,05,500/-
* உதவிப் பேராசிரியர் ( (Pre - Law) - ரூ.57,700-1,82,400/- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பிரதான பாடம் தேர்வு ( கொள்குறி வகை), குழுவின் மதிப்பீடு மற்றும் மதிப்பெண் (இணைப் பேராசிரியர் பதவிக்கு மட்டும்), சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி,/எஸ்.டி/எஸ்.சி.ஏ/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.300 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 31.01.2025. விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2025 ஆகும். தேர்வு நடைபெறும் நாள்: 11.05.2025.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications