10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. திருச்சியில் அரசு வேலை.. நோ எக்ஸாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

திருச்சியில் தேசிய கல்லூரி உள்ளது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அரசு கல்லூரியாகும். 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கல்லூரியில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், டைபிஸ்ட் என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. அரசு விதிகளின்படி இனசுழற்சி அடிப்படையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 Trichy National College Jobs: 30 Vacancies How to Apply?

காலிப்பணியிடங்கள்: இளநிலை உதவியாளர் (02 பணியிடங்கள்), டைப்பிஸ்ட் (01), ஸ்டோர் கீப்பர் (01) லேப் அஸ்சிஸ்டண்ட் (18), ரெக்கார்டு கிளர்க் (04) லைப்ரரி அஸ்சிஸ்டண்ட் (01), அலுவலக உதவியாளர் (03) என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி என்ன?: இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைபிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முது நிலை தட்டச்சு அல்லது தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் முது நிலை தட்டச்சு பிரிதொன்றில் இளநிலை தட்டச்சு ( தமிழக அரசு விதிகளின் படி) ஆகிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், ரெக்கார்டு கிளார்க் (பதிவறை எழுத்தர்), நூலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு: குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 32- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். பொது பிரிவினரை தவிர்த்து இதர பிரிவினர், குறிப்பிட்ட கல்வி தகுதிக்கு மேல் உயர் கல்வி தகுதி பெற்றிருந்தால் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?: சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் சான்றொப்பம் அளிக்கப்பட்ட கல்வி தகுதி சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதவி அட்டை ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: செயலர், தேசியக் கல்லூரி (தன்னாட்சி), கருமண்டபம், திருச்சிராப்பள்ளி -620001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதவி குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 09.9.2023 ஆகும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+