தேர்வு இன்றி சூப்பர் வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்.. அழைக்கும் திருச்சி என்ஐடி.. மிஸ் பண்ணாதீங்க
திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology or NIT) எழுத்து தேர்வு இன்றி மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் என்ஐடி அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி என்ஜினீயர் டிரெய்னி பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி) படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎம், பொதுத்துறை, தன்னாட்சி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 4 ஆண்டு டெக்னிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி விண்ணப்பத்தாரர்களுக்கு வயது சலுகை என்பது வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.nitt.edu/ எனும் இணையதளம் மூலம் பிப்ரவரி 17 ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணபப்ம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்யும்போது எழுத்து தேர்வும் நடத்தப்படும். விண்ணப்பம் செய்வோர் குறைந்த அளவில் இருந்தால் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதல் 6 மாதம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுத்து அடுத்தடுத்து 6 மாதங்கள் என்ற அடிப்படையில் பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications