திருச்சியில் வசிப்பவரா நீங்கள்? மாநகர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது?
திருச்சி : திருச்சி மாநகர காவல்துறையில் காலியாக உள்ள ஊர்காவல்படையினர் பணிக்கு ஆட்கள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில்," திருச்சி மாநகர காவல் ஆணையராக திரு. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் ஊர்காவல்படையினரின் வலுபடுத்தும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சேவை மனப்பான்மையுடன் கூடிய தன்னார்வம் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. அதன்படி வரும் 12.11.2022-ந்தேதி காலை 0630 மணிமுதல் 0830 மணிக்குள் திருச்சி மாநகரில் கே.கே.நகர் காவல்நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்கள் கீழ்கண்ட அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், 03 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துக்கொள்ளபடுகிறது.
திருச்சி மாநகர ஊர்காவல்படையில் சேர தகுதிகள்:
1. பத்தாம் வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
2. வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
3. உயரம் ஆண்-165 செ.மீ. பெண் - 155 செ.மீ இருக்க வேண்டும். 4. திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.
6. எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.
மேலும் திருச்சி மாநகரில் ஊர்காவல்படையில் சேர்ந்து பணியாற்றிட மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் நேரில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது: என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications