கரும்பு தின்ன கூலியா? திருப்பதி கோயிலில் வேலை இருக்கு! எப்படி அப்ளை செய்யணும்.. கடைசி தேதி என்ன?
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் வேலை ரெடியா இருக்கு, விண்ணப்பிக்க நீங்கள் ரெடியா இருக்கீங்களா. எப்படி விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
கரும்பு தின்ன கூலியா என்பதை போல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்ற நமக்கு கசக்குமா என்ன? திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி ஆகிய கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றது.

இந்த ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட ஆர்வமுள்ள பாடகர்கள் மற்றும் பாடகிகள் தற்போது தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்காக தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள பாடகர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலை தளமான http://apps.tirumala.org/dsp/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதில் நேரடியாக வந்து விண்ணப்பித்தாலும் சரி பிற ஊடகங்கள் மூலம் விண்ணப்பித்தாலும் சரி அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தங்கள் விண்ணப்பங்களை இன்று முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பாடகர்களுக்கு நவம்பர் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருப்பதியில் உள்ள மகதி ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வு நடத்தப்படும். விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதற்காக தேவஸ்தானம் எந்த முகவர்களையும் பிரதிநிதிகளையும் நியமிக்கவில்லை. எனவே மோசடியாளர்களிடம் பாடகர்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் விவரங்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications