டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்.. மாதம் ரூ.89,890 வரை சம்பளம்.. அழைக்கும் யூனியன் வங்கி
சென்னை: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 4 பிரிவுகளில் காலியாக உள்ள 606 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் குறைந்தபட்சமாக ரூ.36 ஆயிரம் முதல் ரூ.89,890 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கிக்கு நாட்டின் பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officer) பிரிவின் கீழ் தலைமை மேலாளர், சீனியர் மேலாளர், மேலாளர் உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி தலைமை மேலாளர் பணிக்கு 5 பேர், சீனியர் மேலாளர் பணிக்கு 42 பேர், மேலாளர் பணிக்கு 452 பேர், உதவி மேலாளர் பணிக்கு 108 பேர் என மொத்தம் 606 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தலைமை மேலாளர் பணிக்கு 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சீனியர் மேலாளர், மேலாளர் பணிக்கு 25 வயது முதல் 35 வயது வரையும், உதவி மேலாளர் பணிக்கு 20 வயது முதல் 30 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி -மாதசம்பளம் : இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அரசு அல்லது மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்டெக், எம்எஸ்சி, டிகிரி, சிஏ, சிஎம்ஏ, சிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.89,890 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குள் https://ibpsonline.ibps.in/ubisojan24/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிஇ பிரிவினர் என்றால் ரூ.175 கட்டணம் செலுத்தினால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு, குரூப் டிஸ்கஸன், ஸ்கிரினீங், நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications