யுபிஎஸ்சி வெளியிட்ட பொன்னான வாய்ப்பு.. +2 தகுதி தான்.. ரூ.56,000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கனும்?
சென்னை: தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,000 சம்பளம் வழங்கப்படும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட நாட்டின் உயரிய பொறுப்புகளை யுபிஎஸ்சியே நிரப்புகிறது.

சிவில் பணிகள் மட்டும் இன்றி மேலும் சில துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் யுபிஎஸ்சி வழியாகவே நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி
ராணுவப் பிரிவு - ஆண்கள் - 198, பெண்கள் - 10
கடற்படை - ஆண்கள் - 37, பெண்கள் - 05
விமானப்படை
விமானிப் பிரிவு - ஆண்கள் - 90, பெண்கள் - 02
தரைப்பணிப் பிரிவு (தொழில்நுட்பம்) - ஆண்கள் - 16, பெண்கள் - 02
தரைப்பணிப் பிரிவு (தொழில்நுட்பம் அல்லாதது) - ஆண்கள் - 08, பெண்கள் - 02
கடற்படை அகாடமி (10+2) - ஆண்கள் - 21, பெண்கள் - 03
என மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விமானப்படை பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு படித்து வருபவர்களும் விண்ணப்பிக்க முடியும். எனினும், நேர்முகத் தேர்வு நடைபெறும் முன்பாக 12 ஆம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
திருமணம் ஆகாத விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். ஜூலை 01, 2007-க்கு முன்போ, ஜூலை 2010-க்கு பிறகோ பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சம்பளம் எவ்வளவு?
* லெப்டினன்ட் முதல் மேஜர் வரை - ரூ. 56,100 - ரூ. 1,77,500/-
* லெப்டினன்ட் கர்னல் முதல் மேஜர் ஜெனரல் வரை - ரூ. 1,21,200 - ரூ. 2,12,400/-
* லெப்டினன்ட் ஜெனரல் - ரூ. 1,82,200 - ரூ. 2,24,100/-
* லெப்டினன்ட் ஜெனரல் - ரூ. 2,05,400 - ரூ. 2,24,400/-
* துணைத் தளபதி / இராணுவத் தளபதி / லெப்டினன்ட் ஜெனரல் - ரூ. 2,25,000/-
* ராணுவத் தளபதி - நிலை 18 - ரூ. 2,50,000/-
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, உளவு மற்றும் பெர்சனாலிட்டி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 30.12.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsconline.nic.in/exam-apply












Click it and Unblock the Notifications