மோடி மீட்டிங் நடந்ததே.. சம்பள உயர்வு அறிவிப்பு வராமல் போனது ஏன்? நாடு முழுக்க பல கோடி பேருக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி - ஜூன் 2025 இடையிலான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி இருக்க வேண்டியது. இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மீட்டிங் நடந்தது. ஆனாலும் கூட சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது.

அறிவிப்பு வரவில்லை

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர் மீட்டிங் நடந்தது. அகவிலைப்படி உயர்வு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனாலும் கூட சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை.

Why did the Dearness allowance hike announcement has not come as yet

1. அடிப்படை சம்பளத்தை அகவிலைப்படி உயர்வு உடன் இணைப்பது பற்றி இதில் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

2. அதோடு 8வது ஊதியக்குழுவை மனதில் வைத்து சம்பள structureல் மாற்றத்தை ஏற்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது. இந்த இரண்டு காரணங்களால் இன்னும் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு உயரும்

ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்று இங்கே பார்க்கலாம். ஜூலை-டிசம்பர் 2024 காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகளின் அடிப்படையில், DA உயர்வு 2% ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2018க்குப் பிறகு இது மிகக் குறைவான அகவிலைப்படி உயர்வு ஆகும். 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வால் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். DA மற்றும் DR இன் அதிகரிப்பு, ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும்.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448 கோடி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். கடந்த முறை அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 2024 இல் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 3% உயர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2% செய்யப்பட்டு உள்ளது.

ஒரே மாதிரியான ஊதிய அமைப்புகளைக் கொண்ட ஊழியர்கள் தங்களின் மாதச் சம்பளம் ரூ. 360 அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அடிப்படை ஊதியம் அதிகமாக இருந்தால், DA அதிகமாகும், அதாவது அதிக அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் அதிக சம்பள உயர்வை பெறுவார்கள். இது 7வது ஊதிக்குழுவின் அடிப்படையில் செய்யப்படும் மாற்றம் ஆகும்.

8வது ஊதியக்குழு மாற்றம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழவை அங்கீகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் இந்த அறிவிப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை மாற்றியமைக்க 8 வது ஊதியக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் எடுத்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

7வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ல் முடிவடைகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக பலன் கிடைக்கும்.

2025 ஆம் ஆண்டில் புதிய ஊதியக் குழுவை அமைப்பதன் மூலம் ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்குள் அதன் பரிந்துரைகள் செயலுக்கு வருவது உறுதி செய்யப்படும்.

சம்பளம் எவ்வளவு உயரும்?

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகளின் அடிப்படையில், DA உயர்வு 2% ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2018க்குப் பிறகு இது மிகக் குறைவான அகவிலைப்படி உயர்வு ஆகும். 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+