வீட்டில் இருந்தே IT வேலை.. ஜூனியர் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Winfrox ஐடி நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்த பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.

Winfrox ஐடி நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டேட்டா அனலிஸ்ட்(Junior Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்வேறு source களிடம் இருந்து வரும் டேட்டாக்களை கலெக்ட் செய்து அனலிசஸ் செய்யும் வகையில் பணி இருக்கும்.

it jobs jobs job

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0-2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி விண்ணப்பத்தாரர்கள் இளங்கலை பிரிவில் statistics, கணிதம், எக்கனாமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். Excel அல்லது கூகுள் ஷிட்டில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். SQL மற்றும் டேட்டா விசுவலைசேஷன் டூல்ஸ்களான ( Tableau, Power BI) உள்ளிட்டவற்றில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

புரோகிராமிங் லேங்குவேஜ்களான பைத்தான் அல்லது R தெரிந்திருப்பின் அது பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். இது Remote வகையிலான பணியாகும். இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+