போனஸ்+ சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சூப்பர் சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பிப்ரவரி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் Elite பிரிவில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கை பொறுத்தவரை 60 சதவீதம் அல்லது CGPA 6.0 என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் இருந்து இருக்கலாம். ஆனால் அதனையும் 8 வது செமஸ்டரில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீத அல்லது அதற்கு அதிக மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் Open School அல்லது Distance Education என்பது 10, பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.29,166 சம்பளமாக கிடைக்கும். பணிக்கு சேர்ந்த பிறகு 6 மாதம் கழித்து போனஸாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுதோறும் Increments இருக்கும். Merge Bonuses என்பது பணிக்கு சேர்ந்ததில் இருந்து 18, 24, 36வது மாதங்களில் இருக்கும்.
ஆனால் இந்த பணிக்கு 12 மாத Service Agreement என்பது உள்ளது. இதனை மீறி 12 மாதத்துக்குள் பணியில் இருந்து விலகினால் விப்ரோவுக்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருக்கும். 3 பிரிவுகளில் இண்டர்வியூ என்பது நடக்கும். முதல் ரவுண்ட்டில் ஆன்லைன் அசஸ்மெண்ட்-டில் Aptitude Test, Written Communication Test, Online Programming Test இருக்கும். இதில் Coding Test-ல் விண்ணப்பதாரர்கள் Java, C, C++ அல்லது பைத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
2வது ரவுண்ட் என்பது Business Discussion, 3வது ரவுண்ட் என்பது HR Discussion என்ற முறையில் இருக்கும்.
இந்த பணிக்கு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் கடந்த 3 மாதத்தில் விப்ரோவில் எந்த இண்டர்வியூம் அட்டெர்ன் செய்திருக்க கூடாது. அப்படி அட்டெர்ன் செய்யாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இது ஒரு PAN INDIA வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications