மாத சம்பளம் + பிடெக் படிக்க சான்ஸ்.. டிப்ளமோ முடித்தோரை அழைக்கும் விப்ரோ.. ஆக. 30 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமான விப்ரோ ஐடி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு மாதசம்பளத்துடன் விப்ரோ ஸ்பான்ஷர்ஷிப்பில் பிடெக் படிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது School of IT infrastructure Management என்ற பெயரில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

it jobs jobs job

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:

கல்வி தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் பாஸாகி டிப்ளமோ படிப்பை 2024, 2025ம் ஆண்டில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். பாடவாரியாக பார்த்தால் டிப்ளமோவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இவர்கள் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. விண்ணப்பம் செய்வோர் தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.

சம்பளம் என்ன?

விண்ணப்பம் செய்வோருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Stipend முறையில் சம்பளம் வழங்கப்படும். முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,400 வழங்கப்படும். அதன்பிறகு 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும்.

பிடெக் படிக்க ஸ்பான்ஷர்ஷிப்

அதுமட்டுமின்றி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது.

இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவு முழுவதும் விப்ரோ நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை முடிக்கலாம்.

கடைசி தேதி

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 30 ஆகும். அன்று இரவு 11.59 மணிக்குள் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 4 ரவுண்ட்டுகளாக இண்டர்வியூ என்பது நடக்கும். முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Bussiness Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும்.

சர்வீஸ் அக்ரிமென்ட்

இது PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடைசி 3 மாதத்தில் விப்ரோவில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பணிக்கு சர்வீஸ் அக்ரிமென்ட் உள்ளது. சர்வீஸ் அக்ரிமென்ட்டாக 48 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 4 ஆண்டுகள் விப்ரோவில் கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+