ஜாயினிங் போனஸ் ரூ.75,000 + சம்பளம்.. பிசிஏ, பிஎஸ்சி முடித்தோருக்கு ஜாக்பாட்! விப்ரோ வேலைவாய்ப்பு
சென்னை: விப்ரோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி எம்டெக் படிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று தான் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி விப்ரோ நிறுவனத்தில் Wipro's Work Intergrated Learning Program (WILP) -2024 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை 2023, 2024ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்புக்கு பிறகு டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர சில கண்டிஷன்கள் உள்ளன. அதாவது டிகிரி படிப்பை கண்டிப்பாக கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 படிப்பை வேண்டுமானால் தொலைதூர கல்வி மூலம் படித்திருக்கலாம். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை முடித்திருக்க வேண்டும்.அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும்.
இருப்பினும் Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்கவே கூடாது. மேலும் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பில் எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்குJoining Bonus ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு ரூ.17,553, மூன்றாவது ஆண்டு ரூ.19,618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இது தவிர முக்கியமான விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வோர் இதனை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் இணையதளம் சென்று ஜனவரி மாதம் 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications