வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. மைக்ரோசாஃப்ட் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: மைக்ரோசாஃப்ட் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது.
முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட் . இந்த நிறுவனம் நம்நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் அல்லது தொடர்புடைய பிரிவில் டெக்னிக்கல்லாக திறமை இருப்பதோடு, சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் மட்டுமின்றி பிறவற்றையும் தெரிந்து பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபண்டமண்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். தற்போதை அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். அதுமட்டுமின்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் பற்றி தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications