‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. அலுவலகம் செல்ல தேவையில்லை.. அழைக்கும் ஐடி நிறுவனம்.. அனுபவம் வேண்டாம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் Liventus. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பெங்களூரிலும் இந்த நிறுவனத்தின் கிளை உள்ளது.

லிவென்டஸ் நிறுவனம் என்பது Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது குவாலிட்டி அனலிஸ்ட் (Quality Analyst - Fresher) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அறிவிப்பிலேயே Fresher என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் கூட இந்த குவாலிட்டி அனலிஸ்ட் பணிக்கு தேவையான தகுதியை விண்ணப்பம் செய்வோர் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதி குறித்த விபரம் வருமாறு:
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். QA and Test Methodologies சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும் அல்லது அதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ISTQB சர்ட்டிபிகேட் அல்லது தொடர்புடைய பிரிவில் இன்டன்ஷிப் அல்லது சாப்ட்வேர் பிரிவில் முடித்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.
Java ப்ரோகிமிங்கின் லேங்குவேஜின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங்கின் கான்ஸ்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேவையான புதிய டெக்னாலஜி பற்றி அறிவதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். செகண்ட்ஷிப்ட் மற்றும் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கூட இந்த பணிக்கு பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
அதோடு ஊழியர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஜ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிரப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். சந்தேகம் இருப்பின் 804124 9790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications